பதிவு செய்த நாள்
09
மே
2018
03:05
தீப விளக்குகளில் பலவகை உண்டு. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது ‘நிறைநாழி’ எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றப்படும்.
விளக்கு வகைகளில் சில..
குத்து விளக்கு: குத்து விளக்கு ‘தீபலட்சுமி’ என்று போற்றப்படும் வகையில் புனிதமானது. பூஜையறையில் ஐந்து முகங்கள் ஏற்றப்பட்ட இரண்டு குத்துவிளக்குகள் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.
பாவை விளக்கு: ஒரு பெண் தன் கைகளில் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் காணப்படும். பூஜையறையில் கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.
தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், புஷ்பதீபம், (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி)தீபம், விருக்ஷதீபம், கூர்ம (ஆமை) தீபம், நட்சத்தி தீபம், மேருதீபம், கற்பூர தீபம், என தீபங்கள் 16 வகைப்படும்.
தூக்கு விளக்குகள் எட்டுவகைப்படும். அவை வாடா விளக்கு, தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, நந்தாவிளக்கு, கூண்டு விளக்கு, புறாவிளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, மற்றும் கிளித்தூக்கு விளக்கு.
பூஜை விளக்குகள் ஒன்பது: சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோயில் விளக்குகளின் மூன்று வகைகளாகும். கைவிளக்குகள் என்பவை - ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும். நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.
அஷ்டகஜ தீபங்கள் எட்டு: ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.