கையில் பணம் தங்கவில்லையா? கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா? விரைவில் விடுபடுவதற்கான பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள். இதில் ஏதாவது ஒன்றை செய்தால் போதும். வெள்ளிக்கிழமையன்று மாலையில் மகாலட்சுமி சன்னதியில் மல்லிகைப்பூ சாற்றி ஐந்து வாரம் வழிபடலாம். வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் காமாட்சியை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். தினமும் நீராடியதும் பறவைகளுக்கு அரிசி அல்லது இனிப்பு வழங்கலாம். வீட்டுவாசலில் சிறிது சர்க்கரையைத் தூவி விட, எறும்புகள், பூச்சிகளுக்கு உணவாக்கலாம். இதனால் குடும்ப கஷ்டம் விலகுவதோடு வீண்செலவு மறையும். இதில் எதையும் செய்ய இயலாதவர்கள் லட்சுமி ஸ்லோகத்தை தினமும் நீராடியதும் மூன்று முறை ஜபித்தால் போதும்.
“அச்வாரூடம் மஹாலஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம் ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸ சோபிதாம்! ஸர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம் ஐச்வர்யதாம் ஸ்ரீலஷ்மீம் ஸர்வ ஸௌபாக்ய ஸித்தயே” ஸ்லோகம் உச்சரிக்க கடினமாக இருந்தால், பொருளை மட்டும் கூட சொல்லலாம்.
பொருள்: குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலட்சுமியே! இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவளே! தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே! செல்வம் அளிக்கும் ஐஸ்வர்ய லட்சுமியே! எங்களுக்கு சகல சவுபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.