Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்! விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள் விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்
முதல் பக்கம் » துளிகள்
சகல ஐஸ்வர்யங்களும் தரும் இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு!
எழுத்தின் அளவு:
சகல ஐஸ்வர்யங்களும் தரும் இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு!

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2018
05:06

சிவனுக்கு உகந்த எண்ணெய்களில் முதன்மையாகக் கருதப்படுவது இலுப்பை எண்ணெய். நெய் போன்று லேசான கெட்டியாக இருக்கும் இந்த எண்ணெயை விளக்கில் இட்டு ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் மோட்சமும் கிட்டும். இலுப்பை எண்ணெய்க்கு இந்தப் பெருமை இருப்பதால், இலுப்பமரம் ஸ்தல விருட்சமாக பல பழம்பெரும் சிவன்கோயில்களில் போற்றப்படுகிறது. இந்த வகையில் திருஇரும்பை மாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருச்செங்கோடு, திருவனந்தபுரம், தஞ்சாவூரில் உள்ள கீழ்ச்சூரியமூலை ஆகிய இடங்களில் உள்ள பழம்பெரும் சிவன்கோயில்களில் தல விருட்சமாகப் போற்றப்படுகிறது. இதில் திருப்பழமண்ணிப்படிக்கரை இந்தத் தல மரத்தால் இலுப்பைப்பட்டு என்றே தற்போது அழைக்கப்படுகிறது. மேற்கண்ட பெருமைகள் வாய்ந்த இலுப்பை மரத்தின் சிறப்புகள், மருத்துவ குணங்கள்.

இலுப்ப மரம் என்றாலே சூரியபகவான் வழிபட்ட தஞ்சாவூரில் உள்ள கீழச்சூரிய மூலைதான் ஞாபகத்திற்கு வரும். இங்குள்ள இலுப்பமரம் யாக்ஞவல்கிய முனிவர் சமர்ப்பித்த வேதமந்திர சக்திகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இலுப்பமரமாக வளர்ந்துள்ளதாக ஐதீகம். இக்கோயிலின் ஸ்தல விருட்சமும் இதுதான். பண்டைக்காலத்தில் யாக்ஞவல்கியர் இலுப்பை மரத்தில் இருந்த உருவான இலுப்பைக் கொட்டையில் இருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றி ஈசனை வழிபடத் தொடங்கினார். பின்னர் இங்கு ஒரு இலுப்ப மரக்கட்டையை உருவாக்கி தினமும் கோடி அகல் தீபங்கள் ஏற்றி சிவனை வழிபட்டனர். குறிப்பாக அந்தி வேளையில் பிரதோஷ காலத்தில் இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றினார். ஒருமுறை சூரிய பகவானுக்கு அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது தானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் எப்படி வழிபாட்டில் கலந்து கொள்ள முடியும்? அதே நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் தன்னால் நிரந்தரமாகக் கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என்ற வேதனை அடைந்தார்.

தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய முனிவரிடம் கூறினார். அந்தச் சூரிய பகவானிடம் இருந்து வேதங்களைக் கற்றவர் யாக்ஞவல்கிய முனிவர். சூரிய பகவானின் மனவேதனையைக் கேட்ட முனிவர் அவருக்கு ஆறுதல் கூறி, தான் தினந்தோறும் வணங்கும் சூரிய கோடிப்பிரகாசரிடம் தன் குருவான சூரியனின் மனக்கவலையைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினார். இதற்காக சூரியபகவானிடம் தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கர சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து ஈசனான சூரியகோடீஸ்வரரின் பாதங்களில் அர்ப்பணித்தார். யாக்ஞவல்கிய முனிவரின் குருபக்தியை மெச்சிய ஈசனான சூரியகோடீஸ்வரர் அவர் முன் தோன்றி, நீ பிரதோஷ வேளையில் இலுப்ப எண்ணெயால் ஏற்றும் கோடி தீபங்களை மறுநாள் அதிகாலையில் தரிசனம் செய்யும் சூரியபகவான் பிரதோஷ வழிபாட்டின் அனைத்துப் பலன்களையும் பெறுவார் என்று கூறினார். எனவே, இந்தக் கோயிலில் பிரதோஷ வழிபாட்டின் போது விளக்கேற்றினால் சூரிய தோஷம் நீங்கும். கண்பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து சூரியகோடீஸ்வரரை வழிபட்டால் பலன் நிச்சயம். இக்கோயிலில் அன்னதானம் செய்தால் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

சூரியக் கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தன் பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல் மாலை சூரிய அஸ்த மனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை. பல கோயில்களில் கருவறை இறைவன் மீது ஆண்டிற்குச் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரிய பூஜை என்பர். ஆனால் இந்தக் கோயிலில் இறைவன் மீது தினமும் சூரியனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த கோயிலில் உள்ள இலுப்பை மரம் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. யாக்ஞவல்கியர் பூஜித்த இம்மரத்தை நாமும் வலம் வந்து ஈசனை எண்ணி தியானம் செய்தால் மன அமைதியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். பழங்காலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் இலுப்பை எண்ணெயில் தான் தீபம் ஏற்றப்பட்டது. இலுப்ப எண்ணெயை கோயில்களில் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் எண்ணியவை ஈடேறும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே இதை விட சிறந்த எண்ணெய் பூலோகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்து விளக்கிற்கு இலுப்பை எண்ணெய் விட்டு, வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும். மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றினால் திருமண பாக்யமும், புத்திர சந்தானமும் ஏற்படும். சிவப்புத் திரியிட்டு தீபமேற்றும் போது வறுமை, கடன் நீங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar