திருமாலின் வலது கையிலுள்ள சக்கரத்தை ‘சுதர்சனர்’ ‘சக்கரத்தாழ்வார்’ என்று சொல்வர். கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் சக்கரத்தாழ்வாரே மூலவராக வீற்றிருக்கிறார். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதால் இதற்கு ‘தர்மச்சக்கரம்’ என்று பெயர். சுதர்சனம் என்றால் ‘நல்ல காட்சி’ என்பது பொருள். இதை பார்த்தால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும். சனிக்கிழமையில் துளசி மாலை சாத்தி வழிபட்டால் கவலை, பயம், எதிரி தொல்லை, கடன் பிரச்னை, கிரக தோஷம் நீங்கும். ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று (ஜூன் 22) சுதர்சன ஜெயந்தி பெருமாள் கோயில்களில் சிறப்பாக நடக்கும். அன்று நடக்கும் சுதர்சன ஹோமத்தில் பங்கேற்றால் நினைத்தது நிறைவேறும்.