பழமையான கோயில்களில், சிவன் சன்னிதி எதிரில் உள்ள மேல் உத்திரத்தில் சூரியனை மையப்படுத்தி, சுற்றிலும் 12 ராசிகளின் சின்னத்தைப் பொறித்திருப்பர். சில தலங்களில் 27 நட்சத்திரங்களின் சிற்ப வடிவம் இருக்கும். மதுரை செல்லுõரில் ஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிவத்தலம் திருவாப்புடையார் கோயில். இங்கு பன்னிரு ராசிகளுக்கு மத்தியில் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். கல்வியில் ஆர்வம் வளர குழந்தைகளை, இந்த ராசிக் கட்டத்தின் கீழ் நிற்க வைத்து வணங்கச் செய்வர்.கிரக தோஷத்தால் படிப்பில் தடை, பின் தங்கியிருப்பது போன்ற குறைகள் இருந்தால், சரஸ்வதியின் அருளாலும், நவக்கிரகங்களின் ஆசியோடும் அந்தக் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். கல்விக்குரிய தினமான புதனன்று வழிபடுவது இன்னும் சிறப்பு.