சிலையாக வழிபடுவது ஒருவிதம். சில பொருள்களை தெய்வ வடிவாக வழிபடுவது இன்னொரு விதம். இதற்கு "க்ஷணிக பூஜை என பெயர். "க்ஷணிகம் என்றால் ""பூஜித்த பிறகு விட்டு விடுவது. ஆற்றுமணல், அரிசி, அன்னம், களிமண், பசுஞ்சாணம், வெண்ணெய், ருத்ராட்சம், விபூதி, சந்தனம், தர்ப்பைபுல், பூ, வெல்லம் ஆகிய ஏதாவது ஒன்றை சுவாமியாக வழிபடலாம். இதில் சாணப் பிள்ளையார் வழிபாடு உயர்ந்தது. விநாயகர் சதுர்த்தியன்று களிமண் பிள்ளையாரை வழிபடுவதும் இதன் அடிப்படையில் தான்.