அழகு நிலையில்லாதது. அழியக்கூடியது. எனவே, அதன் மீது பற்று இருக்கக் கூடாது என்பதை உணர்த்தவே கோயில்களில் சுவாமிக்கு "முடிக்காணிக்கை செலுத்த ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா... தாயின் கருவில் பத்து மாதம் வளர்ந்த குழந்தையைச் சுற்றி மலம், சிறுநீர் என்று கழிவு சூழ்ந்திருக்கும். அதனால் குழந்தைக்கு கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதற்காக முதல் மொட்டை அவசியம். குழந்தைக்கு முடி அதிகம் இருந்தால் கோடைகாலத்தில் வியர்த்துக் கொட்டும். பராமரிக்காவிட்டால் அழுக்கும் சேரும். ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புஉண்டு. இதிலிருந்து தப்பிக்க மொட்டை அவசியம். புத்திக் கூர்மை பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.