காளிங்கனின் தலை மீது கண்ணன் ஒரு காலை ஊன்றி, மற்றொரு காலை மேலே தூக்கி நடனமாடினான், தனது ஒரு கையால் அபயம் காட்டி, மற்றொரு கையால் காளிங்கனின் வாலைப் பிடித்துக் கொண்டு நின்றான். இந்தக் கோலம் ஓங்காரத்தின் வடிவத்தில் இருக்கும். நமது மனமே விஷத் தடாகம். அதில் பஞ்சேந்திரியங்கள் என்ற ஐம்புலன்களே ஐந்து தலைப் பாம்பாகிய காளிங்கனாகும். நம் மனத்தில் படமெடுத்தாடும் ஐம்புலன்களாகிய பாம்பை இறைவனின் திருவடி ஒடுக்கி, நல்வழிப்படுத்துகிறது. இதுவே, காளிங்க நர்த்தனம் உணர்த்தும் தத்துவம்.