புத்திரதோஷம் போக்கும் அற்புத மந்திரம்குழந்தை வரம் தரும் வரப்பிரசாதியாகத் திகழ்பவர் முருகப்பெருமான். மாதம் தோறும் வளர்பிறை சஷ்டிநாளில் விரதம் இருந்து, அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வரவேண் டும். காலை அல்லது மாலை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது அவசியம். ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபிக்கலாம். விபூதியை ஒரு தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள். முருகப்பெருமானை மனதில் தியானித்து ‘ஓம் சரவணபவ’ என்று ஆள்காட்டி விரலால் எழுதிக் கொள்ளவேண்டும். அந்த விபூதியை தொடர்ந்து பூசிவாருங்கள். குழந்தை பிறந்தவுடன் ஆண் குழந்தையானால் முருகன் பெயரையோ, பெண் குழந்தையானால் வள்ளி, தெய்வானை என்றோ பெயரிடுவதாக நேர்ந்து கொள்ளுங்கள். முருகன் அருளால் கூடிய சீக்கிரம் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்ந்து விளையாடும்.