பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. (பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.
01 சித்திரை ஸ்நாதனாஷ்டமி 02 வைகாசி சதாசிவாஷ்டமி 03 ஆனி பகவதாஷ்டமி 04 ஆடி நீலகண்டாஷ்டமி 05 ஆவணி ஸ்தாணு_அஷ்டமி 06 புரட்டாசி சம்புகாஅஷ்டமி 07 ஐப்பசி ஈசான சிவாஷ்டமி 08 கார்த்திகை கால பைரவாஷ்டமி 09 மார்கழி சங்கராஷ்டமி 10 தை தேவதாஷ்டமி 11 மாசி மகேஸ்வராஷ்டமி 12 பங்குனி திரியம்பகாஷ்டமி -இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.