பண்ணாரி என்பது கன்னடவார்த்தை. இதன் பொருள் ‘இங்கு இருந்து நகர மாட்டேன், வர மாட்டேன்’ என்பதாகும். மைசூரு சாமுண்டீஸ்வரியைத் தன் ஊருக்கு அழைத்துச் செல்ல முனிவர் ஒருவர் வந்தார். அம்மனும் சம்மதித்தாள். ‘நீ திரும்பி பார்க்காமல் முன்னால் சென்றால், நான் பின்னால் வருவேன்’ என்றாள். முனிவரோ ஓரிடத்தில் மனக்கட்டுப்பாட்டை இழந்து அம்பாள் தன் பின்னால் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தார். அன்னை அந்த இடத்திலேயே தங்கி விட்டாள். அன்று முதல் அந்த இடத்திற்கு ‘பண்ணாரி’ என்ற பெயர் நிலைத்து விட்டது.