திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மனுக்கு பங்குனி 17ல் இருந்து சித்திரை 13வரை 28 நாள் உணவு படைப்பதில்லை. பக்தர்களின் நன்மைக்காக அம்மன் விரதமிருப்பதாக ஐதீகம். இளநீர், மோர் மட்டும் படைக்கப்படும். இந்த கோயிலில் 1706ல் தொடங்கிய திருப்பணி 26 ஆண்டுகளாக நடந்தது. 1732ல் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இக்கோயிலைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது.