உயிர்களின் வாழ்வாதாரங்களில் நீரும் ஒன்று. நீரின் தேவையை நதிகளே பெருமளவில் பூர்த்தி செய்கின்றன. உலகியல் ரீதியாக மட்டுமில்லாமல் ஆன்மிக ரீதியாகவும் நதியை தெய்வமாக பாவித்து வழிபடுவது மரபு. கங்கை, காவிரி என்று எல்லா நதிகளையும் தாயாக கருதுவர். நதியில் நீராடினால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும். புனித நீராடலுக்கு உகந்ததாக ஆடிப் பெருக்கு, சித்திரை விசு, ஐப்பசி விசு, ஐப்பசி கடை ஸ்நானம் என்றெல்லாம் உருவக்கினர். கங்கையில் வாழ்வில் ஒருமுறையாவது நீராடி பாவங்களைத் தொலைக்க வேண்டும் என்றனர்.