பதிவு செய்த நாள்
18
ஆக
2018
06:08
திருமணமாகாத பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறுவிரதம்.இந்நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம். அனந்தன், வாசுகி,குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன்,கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம். ஆண்கள் தங்களுக்கு வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் விரதம் மேற்கொள்வர். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து,செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். நாகர்கோவில் நாகராஜா கோவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் மற்றும் கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் கும்பேஸ்வரர் திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வணங்கி வரலாம். அரசமரத்தடியிலுள்ள நாகர் சிலைகளைத் தரிசிக்கலாம்.