ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும். சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர். இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமானவை. கோடை, குளிர் என பருவம் மாறும்போது நோய்நொடி பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால் வசந்த நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. இப்போது வழக்கத்தில் சாரதா நவராத்திரியே உள்ளது.