● சனீஸ்வரருக்கு விசேஷ சன்னதி உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் கார்த்திகை நான்கு திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம் நடக்கும். ● சங்காபிஷேகத்துக்கு வலம்புரியால் ஆன சங்குகளைக் கொண்டு பூஜிப்பது சிறப்பு. 1008 வலம்புரிச் சங்குகளில் காவிரி தீர்த்தத்தை விட்டு, அதற்கு பூஜை செய்து திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் நடத்துவர். ● சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர், திருச்சி துவாக்குடியை அடுத்த நெடுங்களநாதர், நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தன்று சங்காபிஷேகம் நடக்கும்.