பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
காலண்டரில் பார்த்து இருப்பீர்கள் மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் என்று அன்றைய தேதியில் குறிப்பிட்டு இருப்பார்கள். அதன் படி என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
மேல் நோக்கு நாள் ↑ : உப்பரிகை, கொடிமரம், மதில், பந்தல் ஆரம்பிக்கவும், நெல், ராகி, வாழை, கரும்பு பயிர்களும், விருட்சங்கள் உண்டாக்க உத்தமம்.
கீழ் நோக்கு நாள் ↓ : குளம், கிணறு, களஞ்சியம், வேலி இவைகள் ஆரம்பிக்கவும்,மஞ்சள், வேர்க்கடலை, கிழங்கு வகைகள் வேருக்குரிய செடிகள், கொடிகள் உண்டாக்க உத்தமம்.
சம நோக்கு நாள் ↔ : நாலு கால் பிராணிகள் கிரயம் வாங்குதல், மேய்த்தல், ஏற்றம், உழவு, வாசக்கால், தூண் முதலியன ஆரம்பிக்க உத்தமம்.