Warning: Undefined array key "id" in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php on line 99

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ...


பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ...


இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
(சுவாமி சரணம் ஐயப்பா சரணம்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூறிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே உன்னைபார்க்க வேண்டியே தவமிருந்து (2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஏரும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார்
சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா
தூக்கிவிடையா ஏற்றிவிடையா
தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றல் அவரும் பாதத்தை தந்திடுவார்
நல்லபாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார்

சபரிமலை தனை நெருங்கிடுவார்  பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவனை சரணடைவார்
 மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி

சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா


Fatal error: Uncaught mysqli_sql_exception: Unknown column 'cdate' in 'field list' in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php:246 Stack trace: #0 /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php(246): mysqli_query() #1 {main} thrown in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php on line 246