ஹரிவராசனம்


ஹரிவராசனம்


ஹரிஹராத்மஜ தேவாஷ்டகம்! (கம்பக்குடி களத்தூர் ஐயர்)

ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: உன்னதமான ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருப்பவரும், உலகத்தை (தன் மாயா சக்தியால்) மோஹிக்கச் செய்பவரும், சூரியனால் ஆராதிக்கப்படும் திருவடிகளை உடையவரும். (ஸத்கர்மங்களின்) சத்ருக்களை அழிப்பவரும், நித்யம் ஆனந்த நர்த்தனம் செய்பவரும் ஆகிய ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: சரணகோஷத்தைக் கேட்கும் மனது உடையவரும், பிரபஞ்சத்தைப் போஷிப்பவரும், நர்த்தனமிடுபவரும், காலைக் கதிரவனின் சிவந்த ஒளிமயமான காந்தி உடையவரும், பூதநாயகனுமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: பிரியமான ஸத்யகாவின் ப்ராண நாயகரும், சக்தியும் திறமையும் உள்ளவரும், பக்தர்களுக்கு தன்னருளை பேதமில்லாமல் அளிப்பவரும், ஓம்காரத்தின் வாஸஸ்தலமும், கீர்த்தனத்தில் பிரியம் உள்ளவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: குதிரை வாகனரும், அழகிய முகமுடையவரும், சிறந்த கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல அருள்புரிபவரும், கீர்த்தனத்தில் பிரியம் உள்ளவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: மூன்று புவனங்களில் உள்ளவர்களால் அர்ச்சிக்கப்படுபவரும், சகல தேவதா ஸ்வரூபமாக உள்ளவரும், முக்கண்கள் உடையவரும், ப்ரபுவானவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், முப்பத்துமுக்கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும், நினைத்ததை உடனே அளிப்பவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: பிறவிப் பெருங்கடல் பற்றிய பயத்தை நாசம் செய்பவரும், பக்தர்களுக்கு மங்கலம் அளிப்பதில் பிதாவைப் போன்றவரும், புவனத்தைத் தன்பால் மோஹிக்கச் செய்பவரும், விபூதி அணிந்தவரும், திவ்யமான வெள்ளை யானையை வாகனமாக உடையவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேஷரி வஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: மதுரமான, மிருதுவான மந்தஹாஸம் உடையவரும், ஸுந்தர முகமுடையவரும், இளமையும் மென்மையும் பெற்றவரும், மயங்கவைக்கும் தேகம் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை ஆகிய வாகனங்கள் பெற்றவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பொருள்: தஞ்சமடைந்த ஜனங்கள் மீது பிரியம் கொண்டவரும், நினைத்ததை உடனே தந்தருள்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவும், வேதங்களால் மனோஹரமானவராக வர்ணிக்கப்படுபவரும், கீதத்தில் பிரியம் கொண்டவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்..
ஹரிஹரப்ரேமாக்ருதே மங்களம்..
பிஞ்சாலங்க்ருத மங்களம்..
ப்ரணமதாம் சிந்தாமணி மங்களம்..
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்..
த்ருஜகதாவாத்யப்ரபோ மங்களம்..
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்..
ஸ்ருதிஸிரோலங்கார சன்மங்களம்....ஓம்..ஓம்...ஓம்.


Fatal error: Uncaught mysqli_sql_exception: Unknown column 'cdate' in 'field list' in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php:246 Stack trace: #0 /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php(246): mysqli_query() #1 {main} thrown in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php on line 246