சரணம் சொல்லி கூப்பிடுவோம்...

சரணம் சொல்லி கூப்பிடுவோம்...

சரணம் சொல்லி கூப்பிடுவோம்... சபரிமலை வாசனை...
வரணும் என்று அழைத்திடுவோம்...வரம் கொடுக்கும் ஈசனை...

அருளைத்தரும் ஆண்டவனை...அன்பருக்குமித்திரனை...
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்... ஹரிஹரசுதன் ஐயப்பனை...

வில்லாளி வீரனே...வீரமணி கண்டனே...
தமிழ் சொல்லெடுத்துப் பாடுவோம்...சுந்தரேசன் மைந்தனை...

சுவாமி சரணம் ஐயப்பா... சரணம் சரணம் ஐயப்பா...
சுவாமி சரணம் ஐயப்பா... சரணம் சரணம் ஐயப்பா...

சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை....
பயந்தனையே போக்கிடுவான் பந்தளனின் பிள்ளை...
அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடுமே தொல்லை...
அவனின்றி அவனியிலே அணுவும் அசைவது இல்லை...

வீட்டை விட்டு கட்டும் கட்டி அருள்மலை புறப்படுவோம்...
கூட்டு சரணம் போட்டு எருமேலி பேட்டை செல்வோம்...
பேட்டை துள்ளி ஆடும் போது பேரின்பம் கொள்வோம்...

சாமி திந்தக்கத்தோம்...ஐயப்பன் திந்தக்கத்தோம்
சாமி திந்தக்கத்தோம்...ஐயப்பன் திந்தக்கத்தோம்

பேட்டை துள்ளி ஆடும் போது பேரின்பம் கொள்வோம்...
கோட்டை காவலன் வாபரு சுவாமியை கொண்டாடி மகிழ்வோம்...

சுவாமி சரணம் ஐயப்பா... சரணம் சரணம் ஐயப்பா...
சுவாமி சரணம் ஐயப்பா... சரணம் சரணம் ஐயப்பா...

சீர்மேவும் சபரிமலை நாதன் அருள் தேடு...
ஈரொன்பது படியேறி ஈசன் பதம் நாடு...
பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு...
நாராயணன் செல்வனையே நாவினிக்க பாடு...

சுவாமி சரணம் ஐயப்பா... சரணம் சரணம் ஐயப்பா...
சுவாமி சரணம் ஐயப்பா... சரணம் சரணம் ஐயப்பா...

Fatal error: Uncaught mysqli_sql_exception: Unknown column 'cdate' in 'field list' in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php:246 Stack trace: #0 /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php(246): mysqli_query() #1 {main} thrown in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/audio.php on line 246