குளத்துப்புழை



Warning: Undefined variable $cl_mp in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/detail.php on line 170

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில் ஐயப்பன், குழந்தை வடிவமாகக் காட்சி தருகிறார்.கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம் எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீர்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்தச் சன்னிதிக்கு வந்து வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இங்கு உள்ள குளம், மிகவும் விசேஷமானது. இந்தக் குளம் ஐயப்பனால் உருவாக்கப்பட்ட குளம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம் தேவர்களாகக் கருதப்படுகின்றன. நமது வேண்டுதல்களைச் சொல்லி இந்தக் குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி போட்டால் நமது வேண்டுதல்கள் யாவும் நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு ..!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்