சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா ஆரியங்காவில் மாப்பிள்ளை ஐயப்பனாக கிரகஸ்த (குடும்பம்) நிலையில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. பரசுராமர் நிறுவியதாகக் சொல்லப்படும் மிக முக்கியமான ஐந்து தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிவே இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன் என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.இக்கோயிலின் பூஜை முறைகள் கேரளா மற்றும் தமிழ்நாட்டு முறைப்படி நடைபெறுவது சிறப்பு.