வழக்கமாக எல்லா கோயில்களிலும் மூலவருக்கு எதிரேதான் பிரதான நுழைவுவாயில் இருக்கும். ஆனால், இங்கு மூலவருக்கு பின் புறத்தில், மேற்கு திசையில் நுழைவாயில் இருக்கிறது. பிரகாரத்தில் கைலாசநாதர் 16 பட்டைகளுடன் சோடச லிங்கமாக காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு யக்ஞேயஸ்வரர் திருக்கோயில்,
திருவாரூர்,திருவாரூர் மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
பிரகாரத்தில் சுப்பிரமணியர், பைரவர், சனீஸ்வரர், சூரியன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். நவக்கிரக சன்னதியும் உள்ளது.
பிரார்த்தனை
இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம்.
அம்பிகை சிறப்பு: சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் உத்ரவேதி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதற்கு காரணம் உண்டு. சிவன், அம்பிகையின் இருப்பிடம் கைலாயம். கைலாயத்தின் திசை வடக்கு. ஆகவே அம்பிகை வடக்கு திசையை இருப்பிடமாகக் கொண்டவள் ஆகிறாள். உத்ரம் என்றால் "வடக்கு', வேதி என்றால் "நாயகி' என்று பொருள் உண்டு. எனவே இவள் <"உத்ரவேதி' என அழைக்கப்படுகிறாள். எனவே இங்கு வழிபட்டால் கைலாயத்திற்கே சென்ற புண்ணியமும் கிடைக்கும். தீர்த்த சிறப்பு: திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கான பிரதான தீர்த்தம் தேவ தீர்த்தம் என்னும் கமலாலய தீர்த்தம் (தெப்பக்குளம்) ஆகும். சிவத்தல யாத்திரை சென்ற சுந்தரர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு சிவன், சுந்தரருக்கு பொன்முடிப்பை பரிசாகக் கொடுத்தார். சுந்தரர், அதை அத்தலத்திலுள்ள மணிமுத்தாறு (நதி) தீர்த்தத்திற்குள் போட்டுவிட்டு, கமலாலய தீர்த்தத்தில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு சிறப்பு மிக்க இந்த தீர்த்தத்தின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது.
கமலாலய தீர்த்தத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் இருப்பதாக ஐதீகம். இதில் 43வது தீர்த்தக்கட்டம் இத்தலத்தில் அமைந்துள்ளது. இதனை சுவாமியின் பெயரில், "யக்ஞேஸ்வரக் கட்டம்' என்றே சொல்கிறார்கள்.
சிறப்பம்சம்: வழக்கமாக எல்லா கோயில்களிலும் மூலவருக்கு எதிரேதான் பிரதான நுழைவுவாயில் இருக்கும். ஆனால், இங்கு மூலவருக்கு பின் புறத்தில், மேற்கு திசையில் நுழைவாயில் இருக்கிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை இருக்கின்றனர்.
பிரகாரத்தில் கைலாசநாதர் 16 பட்டைகளுடன் சோடச லிங்கமாக காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் இவரது சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது, இவரை வழிபட 16 செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
படைப்புத் தொழில் செய்த பிரம்மா, சிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்ததால், தன்னையும் சிவனுக்கு இணையாகக் கருதி ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தை அடக்க சிவன், அவரது ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளினார். தவறை உணர்ந்த அவர், மன்னிப்பு வேண்டி ஒரு யாகம் நடத்த விரும்பினார். பூலோகத்தில் இத்தலத்தை தேர்ந்தெடுத்த அவர், சிவனை வேண்டி "ருத்ர யாகம்' நடத்தினார். மகிழ்ந்த சிவன் அவருக்கு, ரிஷபாரூடராக அம்பிகையுடன் காட்சி தந்தார். பிரம்மா அவரை வணங்கி, படைப்புத்தொழிலை மீண்டும் தொடர அருளும்படி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மனுக்கு மீண்டும் படைக்கும் ஆற்றலை கொடுத்தார். எனவே இத்தலத்து சிவனுக்கு "யக்ஞேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரை "யாகநாதர்' என்றும் அழைப்பர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:வழக்கமாக எல்லா கோயில்களிலும் மூலவருக்கு எதிரேதான் பிரதான நுழைவுவாயில் இருக்கும். ஆனால், இங்கு மூலவருக்கு பின் புறத்தில், மேற்கு திசையில் நுழைவாயில் இருக்கிறது. பிரகாரத்தில் கைலாசநாதர் 16 பட்டைகளுடன் சோடச லிங்கமாக காட்சி தருகிறார்.