Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சத்தியகிரீஸ்வரர்
  அம்மன்/தாயார்: வேணுவனேஸ்வரி
  தல விருட்சம்: மூங்கில்மரம்
  தீர்த்தம்: சந்திரபுஷ்கரணி
  புராண பெயர்: திருமய்யம்
  ஊர்: திருமயம்
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவிழா - 10 நாட்கள் - 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். ஆடிபூரம் - 10 நாள். தைப் பூசம் - 1 நாள் திருவிழா. பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் பவுர்ணமி கிரிவலம்: இத்தலத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. இந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சன்னதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம் - 622 507, புதுக்கோட்டை மாவட்டம்  
   
போன்:
   
  +91-4322-221084, 99407 66340 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு அருகில் விருத்தபுரீஸ்வரர்(பழம்பதிநாதர்) திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.   
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  வளையல்,பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள் 
    
 தலபெருமை:
     
  சத்திய மகரிஷி பூஜை செய்த தலம். மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கியே இருக்கிறது.
இந்த சிவாலயத்தை தனியே சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.
1300 வருடங்களுக்கு முன்பு மகேந்திர பல்லவன் கட்டிய குடவரைக்கோயில்.
 
     
  தல வரலாறு:
     
  அருகில் உள்ள பெருமாள் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்தியகிரீஸ்வரர் சமேத ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது.தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம்.அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக அதாவது மூங்கில் காடாக இருந்திருக்கிறது.அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். சத்திய கிரீஸ்வரர் அழகிய லிங்கரூபமாக காட்சி அளிக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. இந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தை தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சன்னதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar