Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலதண்டாயுதபாணி
  ஊர்: தபசுமலை
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகம்  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தல் மூலிகை கலந்த பிரசாதம் தருவது மிக சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மணி 10 வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  மலையடிவாரத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட இடத்தில் குடவரை கோயில் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  சர்க்கரை நோய் குணமாகவும், குடல் புண்ணில் இருந்து விடுபடவும், வலிப்பு போன்ற நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தவும், கிரக தோஷம் மற்றும் நாக தோஷம் விலகவும், கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், கல்யாண வரம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் இங்குள்ள முருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு நாகர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தும், விளக்கேற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்த கோயிலின் முக்கியமான விசேஷம்... மூலிகை கலந்த பிரசாதம். இந்தப் பிரசாதத்தை உட்கொண்டால், சர்க்கரை நோய் குணமாகும்; குடல் புண்ணில் இருந்து விடுபடலாம்; வலிப்பு போன்ற நரம்புத் தளர்ச்சி நோயையும் இது கட்டுப்படுத்துகிறது எனச் சொல்லி சிலிர்க்கின்றனர் பக்தர்கள். கிரக தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்களுக்கு இங்கே முருகப்பெருமானின் சன்னதியில் சிறப்பு யாகம் செய்யப்படுகிறது. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், விரைவில் தோஷங்கள் யாவும் விலகும். இங்கேயுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகளை ஒரு சீட்டில் எழுதி வைத்தால், அந்தக் கஷ்டங்களை உடனே தீர்த்துவைத்துவிடுவாராம் பைரவர். இவரிடம் வேண்டிக்கொண்டு, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வந்தவர்கள் ஏராளம் என்கின்றனர், பக்தர்கள். கந்த சஷ்டி நாளின்போது விரதம் மேற்கொண்ட பெண்கள், ஒரேயொரு முறை தபசுமலைக்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து விளக்கேற்றிப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம்! பிள்ளை வரம் வேண்டுவோர், முருகக் கடவுளின் திருப்பாதத்தில் வைத்து பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சைப் பழத்தைச் சாறாக்கிச் சாப்பிட.. குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மலையடிவாரத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட இடத்தில், குடைவரைக் கோயிலும் உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நிமிடம் தியானித்து கந்தக் கடவுளை வணங்கினால், ஞானமும் யோகமும் கைகூடும் என்பது உறுதி.  
     
  தல வரலாறு:
     
  ஒருகாலத்தில், முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த வேலைக் கண்டு சிலிர்த்த மக்கள், அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு விக்கிரம் அமைத்துப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினார்கள் என்கிறது தல வரலாறு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தல் மூலிகை கலந்த பிரசாதம் தருவது மிக சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar