Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பூமிநாதர்
  அம்மன்/தாயார்: ஆரணவல்லி
  தீர்த்தம்: பிருத்வி தீர்த்தம்
  ஊர்: செவலூர்
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை  
     
 தல சிறப்பு:
     
  செவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம் இது. இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது. மகா விஷ்ணுவால் எழுப்பப்பட்ட புண்ணியத் தலம், மூலவர் லட்சுமி நரசிம்மர் மீது வருடத்தின் எல்லா நாட்களும் சூரியஒளி படுவது போல் கருவறை அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும்!  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் - 622 403, புதுக்கோட்டை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4322 221084, 97869 65659 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு அருகில் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், சிகாநாதர் திருக்கோயில்.  
     
 
பிரார்த்தனை
    
  பூகம்பம், நிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும்.

தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நாகப்புற்றுகளை அழித்த கொடுமை, கோயில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம்.

இதுதவிர முதுகுவலி, மூலம், பிருஷ்ட நோய்களால் உட்கார முடியாதவர்கள் நிவாரணம் பெறவும் இங்கு விசேஷ பூஜை நடக்கிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பூகம்பத்தால் இறந்த ஜீவன்கள் நற்கதியை பெறவும், கோர்ட் வழக்குகள், உறவினர் பகை போன்றவற்றால் தடைப்பட்டுள்ள காரியங்கள், வாஸ்து நாளில் இங்கு வந்து விசேஷ பூஜை செய்பவர்களுக்கு பலன் கிட்டும். வாஸ்து நாளை தவற விட்டால் செவ்வாய்கிழமைகளில் இப்பூஜையை நடத்தலாம். 
    
 தலபெருமை:
     
  வாஸ்து நாட்களில் விசேஷ பூஜை நடக்கும் கோயில்களில் ஒன்று.  
     
  தல வரலாறு:
     
  இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருதயுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்து தர வேண்டும் என்பது அவளது வேண்டுகோள். அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதாயுகம், துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது.

உனது பக்தர்கள் உன்னை பூஜிப்பதன் மூலமே இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை என சொல்லி மறைந்தார். இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என தேடியலைந்த பூமாதேவி, அவள் பல தலங்களுக்கும் சென்றாள்.

சென்ற இடமெல்லாம் ஆங்காங்கு இருந்த சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். அவள் பிரார்த்தித்த மூர்த்திகளுக்கு பூமிநாதர், பூலோகநாதர் என்ற பெயர்கள் ஏற்பட்டது. அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar