Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வீரமாகாளியம்மன்
  ஊர்: அறந்தாங்கி
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசி மகம் மற்றும் சிவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  தன்னை நாடி வருவோரின் துயர் துடைக்க, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள் வீரமாகாளியம்மன். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி, கருணையே உருவெனக் காட்சி தரும் அன்னையை வணங்கினால், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் அறந்தாங்கி, புதுக்கோட்டை.  
   
    
 பொது தகவல்:
     
  கோயிலின் முன்னே விநாயகர் சன்னதியும், கருப்பர் சன்னதியும் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  கல்யாண வரம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சாதாரணப் பொட்டு அல்லது தங்கம், வெள்ளியில் பொட்டு செய்து சமர்ப்பித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். மாவிளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும். 
    
 தலபெருமை:
     
 

சுமார் 300 வருடங்கள் பழைமை மிகுந்த ஆலயம். வசந்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது. வீரமாகாளியம்மன் கோயில். திருமுடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறாள் அன்னை. செவியில், சிவனாருக்கு உரிய அணிகலனை அணிந்திருக்கும் அழகே அழகு!

தன்னை நாடி வருவோரின் துயர் துடைக்க, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள் வீரமாகாளியம்மன். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி, கருணையே உருவெனக் காட்சி தரும் அன்னையை வணங்கினால், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.

ஆடிப் பெருந்திருவிழா, இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது ஆனி மாத நிறைவில் அல்லது ஆடித் துவக்கத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அதையடுத்து வருகிற செவ்வாய்க் கிழமையில், காப்புக் கட்டித் திருவிழா துவங்கும். 18 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் அம்மன் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். விழாவின் நிறைவில், தெப்போற்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து வீரமாகாளியம்மனை வேண்டினால், வாழ்வில் வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

 
     
  தல வரலாறு:
     
  ஒரு காலத்தில் காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி எனும் கிராம மக்கள்õல் வழிபட்டவளாம் வீரமாகாளியம்மன். பிறகு தற்போதைய கோயில் இருக்கும் இடமான அறந்தாங்கியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மூக்குடி கிராமத்தில் எழுந்தருளினாள் என்கிறது தல வரலாறு. வனவாசத்தின்போது, வீரவனம் என்று அழைக்கப்பட்ட அறந்தாங்கிப் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வந்ததாகவும், அப்போது அம்மனை அவர்கள் வணங்கியதாகவும், அவர்கள் தங்குவதற்கு நல்ல இடத்தை அம்மன் காட்டி அருளியதாகவும் சொல்வர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ன்னை நாடி வருவோரின் துயர் துடைக்க, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள் வீரமாகாளியம்மன். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி, கருணையே உருவெனக் காட்சி தரும் அன்னையை வணங்கினால், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar