இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பு மண்டபத்தில் விநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை, பிரம்மா, பைரவர், நவக்கிரகம் பலிபீடம், நந்தி ஆகியோர்அருள்பாலிக்கிறார்கள். கற்பகிரகத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், செல்வ வளம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
தாலிக்கயிறு, வளையல், மஞ்சள் புத்தாடை அம்மனுக்கு படைத்து சுமங்கலிக்கு கொடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
திருவாரூர் தியாகராஜர் கோயில் எட்டிய தொலைவில் உள்ளதால் எட்டியலூர் என்றும், இப்பகுதியில் தானியங்கள் மற்றும் மலர்கள் எட்டுவகையானது உற்பத்தி செய்து தியாகராஜர் கோயிலுக்கு அனுப்பியதால் எட்டு இயல்புகளையுடைதால் எட்டியலூர் என மறுவிய தாகவும் கூறப்படுகிறது. சோழ மன்னன், அவர் மண்டலத்தில் 108 கோயில்கள் கட்டியதில் இந்த கோயிலும் ஒன்று.
தல வரலாறு:
சோழ மன்னர் அவர் மண்டலத்தில் 108 கோயில் கட்டியதில் இப்பகுதியில் உமா மகேஸ்வரி உடனுறை உமா மகேஸ்வரர் திருக்கோயில் அமைந்தது சிறப்பு. மேலும் இப்பகுதியில் காசியிலிருந்து பிரதிஷ்டை செய்த விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இக்கோயில் நாளடைவில் பராமரிப்பில்லாமல் சிதலமடைந்துவிட்டது. அச்சமயம் இவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு தலையாறி கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்களை தண்ணீர் கொண்டு வந்து என் திருமேனியை சுத்தம் செய்து, மிளகாய் சாந்து அறைத்து தடவி வழிபாடு நடத்தினால் கட்டாயம் மழை வரும் பஞ்சம் தீரும் என்று கூறினார். இதை தலையாறி ஊர் பெரியவரிடம் கூறினார். அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில தினங்கள் கடந்த பின் தலையாறி கூறியதை நிறைவேற்றினார்கள். உடனே மழை பெய்து அப்பகுதி செழிப்பானது. அதன்பின் காட்டில் மறைந்து கிடந்த சிவலிங்கம் உள்ளிட்ட பல விக்கரஹங்களை பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : திருவாரூர்- கும்பகோணம் சாலையில் 10 கி.மீ., தொலைவில் எட்டியலூர் உள்ளது. வெட்டாற்றுப்பாலம் பஸ் நிறுத் தத்தில் இறங்கி உள்ளே 2 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி,சென்னை
தங்கும் வசதி : திருவாரூர்
செல்வீஸ் +91-4366-222 080, 320625 ராயல் பார்க் +91-4366-251 020-23 தைலம்மை இன் +91-4366-221 113-4-5 கிரின்ராயல் +91-4366-221114,221115 பிரசிடென்சி +91-4366-222538 மீனாட்சி +91-9443303020.