Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மார்க்க சகாயேஸ்வரர்
  அம்மன்/தாயார்: மரகதாம்பிகை
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: பாண தீர்த்தம்
  ஊர்: அக்ராபாளையம்
  மாவட்டம்: திருவண்ணாமலை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமி, அம்மாவாசை, திருவூடல். பங்குனி உத்திரம், ஆருத்ரா சிவராத்திரி ஆகியன நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  அம்பாளின் கண்களில் மரகத ஒளி மின்னுவதை உணர்ந்து நம் கண்ணில் நீர் ததும்பித் வருவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும். பிரதோஷத்தன்று : 3.30 முதல் 8.30 வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோயில், அக்ராபாளையம், திருவண்ணாமலை.  
   
போன்:
   
  +91 9842342963,9442808147 
    
 பொது தகவல்:
     
  அம்பாளின் திருநாமம்- மரகதாம்பிகை. அவளின் கண்களில் அப்படியொரு மரகத ஒளி மின்னுவதை உணர்ந்து சிலிர்த்தபடி கோயிலை வலம் வந்தால், நம் கண்ணில் நீர் ததும்பித் திரையிடும்.  
     
 
பிரார்த்தனை
    
  தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு நெய்விளக்கேற்றியும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்த ஊரின் மையத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் மார்க்க சகாயேஸ்வரர். அம்பாளின் திருநாமம்- மரகதாம்பிகை. அவளின் கண்களில் அப்படியொரு மரகத ஒளி மின்னுவதை உணர்ந்து சிலிர்த்தபடி கோயிலை வலம் வந்தால், நம் கண்ணில் நீர் ததும்பித் திரையிடும். திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறத் துவங்கிவிட்டால் வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு எனப் பல ஊர்களில் இருந்து மாட்டு வண்டி கட்டிக்கொண்டு புறப்படும் பக்தர்கள், வழியில்உள்ள தலங்களைத் தரிசித்தபடியே திருவண்ணாமலை நோக்கிச் செல்வார்கள். அப்படிச் செல்கிறபோது, ஆரணியை அடுத்த அக்ராபாளையம் சிவாலயத்துக்கும் வந்து, அன்றிரவு அங்கேயே தங்கி, மறுநாள்தான் கிளம்பிச் செல்வார்கள். அப்போது, மார்க்க சகாயேஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, ருத்ரம் சொல்லி வழிபாடுகள் நடைபெறும். பிறகு, விடிய விடிய அன்னதானம் நடைபெறும். அதையடுத்து, அந்த பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  ஒரு தேசத்தை ஆள்கிறவன் தன் மக்களின் தேவைகள் குறித்தும், தன் மண்ணின் செழுமை குறித்தும், நீர் நிலைகள் குறித்தும், படைபலம் குறித்தும் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறானோ, அதேபோல் அடுத்தவர்களின் தேசத்தைப் பற்றியும் முழுவதுமாக அறிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம். அந்தத் தேசத்தின் தலைவன் ஆள்- அம்பு சேனையுடன் தன் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் தொடுத்து, தேசத்தையும் செல்வங்களையும் பெண்களையும் கையகப்படுத்திக்கொண்டால் என்ன செய்வது என்கிற யோசனையில் முன்ஜாக்கிரதையாக இருப்பவனே உண்மையான அரசன். கூடவே, மற்ற தேசங்களில் என்னவெல்லாம் முக்கியமானவை என்று கருதப்படுகின்றனவோ, எதுவெல்லாம் சிறப்பானவையாகப் போற்றப்படுகின்றனவோ, அவை நம் நாட்டுக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்றும், அந்தத் தேசத்தை நாம் ஆட்சி செய்தால் சிறப்பும் பெருமையும் இன்னும் சேருமே என்றும் நினைத்தார்கள் மன்னர் பெருமக்கள். அப்படித்தான், நடுநாடு என்று சொல்லப்படும் தேசத்தை சோழ மன்னன் ஒருவன் படை யெடுத்து வென்றான். மலைகளும் பச்சைப்பசேல் வயல்களுமாக இருந்த அந்தத் தேசத்தில் மழைக்கும் பஞ்சமில்லை; வெயிலுக்கும் குறைவில்லை. பாறைகள் கொண்ட மலைகளும் இருந்தன; மரம் செடி- கொடிகளுடனான மலைகளும் இருந்தன. சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும் வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. முனிவர்களாலும் ஞானிகளாலும் போற்றிக் கொண்டாடப்பட்ட, தபஸ் செய்வதற்கு உகந்த அழகிய வனமாகத் திகழ்ந்த ஆரணிக்கு வந்து, அங்கே சில காலம் தங்கி, தவம் செய்த முனிவர் பெருமக்கள் பலர். சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கித் திளைத்தான். இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல... மகிழ்ந்து போனான் மன்னன். அப்படியென்றால், இங்கே அருமையானதொரு சிவாலயத்தைக் கட்டுங்கள். நம் தேசத்து மக்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ, நம் வாழ்க்கைப் பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் நம் வழித் துணையாக சிவனார் வரட்டும். வழியில் ஏதும் சிக்கல்களோ பிரச்னைகளோ வராமல் இருக்கவும், சரியான வழி எது என்று நமக்குக் காட்டவும் அந்தத் தென்னாடுடைய ஈசன் அருள் புரியட்டும்! என்று மன்னன் மனத்துள் வேண்டிக்கொண்டு உத்தரவிட்டான். அதன்படி, அந்த வனப்பகுதியின் ஓரிடத்தில், சுபயோக சுபதினமான ஒரு முகூர்த்த நாளில் பூமி பூஜை போடப்பட்டது. அஸ்திவாரம் தோண்டப் பட்டது. கற்கள் இறக்கப்பட்டன. சிற்பிகள் வந்திறங்கினார்கள். மளமளவென அங்கே கோயில் எழும்பியது. நல்வழிகாட்டும் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்பதால், நல்ல விஷயங்களைத் தந்தருளும் ஈசன் வீற்றிருக்கிறான் என்பதால், இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு மார்க்க சகாயேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்பாளின் கண்களில் மரகத ஒளி மின்னுவதை உணர்ந்து நம் கண்ணில் நீர் ததும்பித் வருவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar