தசரா, விஜயதசமி, தமிழ் வருட பிறப்பு, அனுமன் ஜெயந்தி, ஆடி வெள்ளிக்கிழமைகள்.
தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் மகாதுர்கா, மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகியோர் கிழக்கு திசையில் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை: 7.30 மணி முதல் 12 மணி வரை மாலை: 5 மணி முதல் 8.30 மணி வரை.
முகவரி:
மகாலட்சுமி மந்திர் கோவில்
கோவை– பொள்ளாச்சி மெயின் ரோடு,ஈச்சனாரி.
கோயம்புத்தூர் 641021
போன்:
+91 9244421845, 9952520036, 98945 73115
பொது தகவல்:
வட இந்திய கோவில்கள் போல அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகள் மட்டும் தென் மாநில ஆகம விதி படி நடக்கிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் நுழைவாசலில் ஸ்ரீ கௌரி விநாகயர் (கிழக்கு) மற்றும் ஸ்ரீ செந்தில்குமரன் (கிழக்கு) கடவுள்கள் உள்ளன. தெற்கு நோக்கி ஆஞ்ச நேயர் உள்ளார். கோவிலை சுற்றிலும் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ மகாதுர்கா, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மகா சரஸ்வதி ஆகியோர் கிழக்கு திசையில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் ஒன்றாக பெற இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
தலபெருமை:
முப்பெரும் தேவியரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்பு. கோவில் நுழைவாசலில் திருப்பால் கடலில் வீற்றிருக்கும் ஸ்ரீ விஷ்ணு உடன் பிரம்மா, ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி உடன் காட்சியளிக்கிறார். இரு பக்கங்களிலும் ஸ்ரீ சங்கு, ஸ்ரீ சக்ரா இடம்பெற்றுள்ளது. இது தவிர யாகசாலை மண்டபம், பிரசாத மண்டபமும் உள்ளது.
தல வரலாறு:
ஜூன் 2002ம் ஆண்டு கட்டப்பட்டு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. ஸ்ரீ காஞ்சி காமாட்சி காமகோடி பீடம் சுவாமிகள் தலைமை ஏற்றார். அடுத்து 2014ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலஸ்தானத்தில் மகாதுர்கா, மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகியோர் கிழக்கு திசையில் அருள்பாலிப்பது சிறப்பு.