மாங்கரையில் இருந்து உற்பத்தி ஆகும் செம்பாநதிக் கரையில் அமைந்துள்ளது. சொக்கசெம்பீஸ்வரர் சகஸ்கரலிங்கம் வடிவில் 1008 லிங்கங்களாக கோவை மாநகரில் எங்கும் இல்லதா சிறப்பு, இது ஆயிரத்து எட்டு சிவலிங்களை வழிபடுவதற்கு நிகரானது
கல்யாண சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் அருள்பாளிக்கிறார் திருமண தடை உள்ளவர்கள் மனதர பிரார்த்தனை செய்தால் திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 7 மணி வரை மாலை: 5 மணி முதல் 7 மணி வரை
மீனாட்சி உடனமர் சொக்க செம்பீஸ்வரருக்கு சகஸ்ரலிங்கம், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்ரமணியருக்கு இரண்டு நிலை கோபுரம் முகப்பு மண்டபமும், ஸ்ரீ கணபதிக்கு தனி ஆலயமும், நவக்கிரகங்களுக்கு தனி ஆலயமும், பரிவார தொய்வங்களாக ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீசப்த கன்னிமார்கள் பலிபீடத்துடன் குறிஞ்சி மண்டபமும் கொடிமரமும், இந்திரன் முதலாகிய எண்திசை காவலர்களுக்கும் ஆகம விதிப்படியும், ஸ்தலம்,மூர்த்தி, தீர்த்தம் என்ற சிற்ப சாஸ்திர முறைப்படியும், மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஸ்தல விருச்சமாக செம்பக மரத்தையும் நிறுவி வானோரும் வியக்கும் வண்ணம் உள்ளது.
பிரார்த்தனை
திருமணம் தடை, குழந்தை பக்கியம்
நேர்த்திக்கடன்:
அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
தலபெருமை:
பேரூராதீனம் வழிகாட்டுதலின்படி காங்கேயம் பரஞ்சேர்வழி சென்று பார்த்ததில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக சிவனை குலதொய்பமாக வழிபட்டோர் அம்மனை குலதொய்வமாக ஏற்று கரியகாளியம்மனுக்கு மிகப்பிரம்மாண்பமாக கோவில்அமைத்துள்ளதை காண முடிந்தது.
தல வரலாறு:
பரஞ்சேர்வழியில் ஆண் தெய்வத்திறக்கு பதிலாக பெண் தெய்வத்தை குலதெய்வமாக நிலைநாட்டியுள்ளதின் அடிப்படையிலும் பாலவேளாளக்கவுண்டர் சமூகத்தில் உள்ள 18 குலங்களில் ஏனைய அனைத்து குலங்களிலும் பெண் தெய்வங்களே குலதெய்வமாக உள்ள நிலையின் அடிப்டையிலும் எங்கள் செம்பகுல முன்னோர் அவினாசிக்கு அருகில் சேவூர் செம்பாபுரியில் செம்பகாளியம்மனை நிலைநாட்டியுள்ள வரலாற்றின் அடிப்படையிலும் பெண் தெய்வத்தை குலதெய்வமாக வழிபட்டால் குலம் குடும்பம் செழித்து விளக்கும் என்று சான்றோர் ஆன்றோர் ஆன்மிகப்பெரியோர் அடிகளார்களின் எண்ணத்தின் அடிப்படையிலும் ஒருங்கே அமையப்பெற்ற இச்சாசக்தி,ஞானசக்தி.கிரியாசக்திகளின் சாந்த சொரூபமான காளியம்மனை எங்களது குலத்தின் பெயரடன் சேர்த்து செம்காளியம்மன் என்று பெயரிட்டு கொண்டாட அம்மன் அருள்பாலித்துள்ளார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சொக்கசெம்பீஸ்வரர் சகஸ்கரலிங்கம் வடிவில் 1008 லிங்கங்களாக கோவை மாநகரில் எங்கும் இல்லதா சிறப்பு, இது ஆயிரத்து எட்டு சிவலிங்களை வழிபடுவதற்கு நிகரானது.