அமாவாசை, பெளர்ணமி, ராகு–கேது பூஜை, பிரதோசம், சங்கரஹடா சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக்கிழமை, சித்திரை மாத திருவிழா என அனைத்து சன்னதிகளும் உள்ளதால் அனைத்து விசேசங்களும் சிறப்பாக நடக்கும்.
தல சிறப்பு:
இப்பகுதி மக்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற இங்கு முதலில் வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. விஜய என்றால் ஜெயம் அல்லது வெற்றி என்று பொருள்.
திறக்கும் நேரம்:
காலை: 6 மணி முதல் 9 மணி வரை மாலை: 4 மணி முதல் 8 மணி வரை
முகவரி:
விஜய கணபதி கோயில்
திருச்சி மெயின் ரோடு,
காமாட்சிபுரம், ஒண்டிப்புதூர்,
கோவை - 641014
போன்:
+91 96883 25427
பொது தகவல்:
விஜய கணபதி, மாரியம்மன், சந்திர பகவான், கேது பகவான், நந்தி, பதுமை–புதுமை காவல் தெய்வங்கள், சக்தி வேல் போன்றவை உள்ளன.
பிரார்த்தனை
திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் உண்டு.
தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் விநாயகருக்காக உருவான முதல் கோயில் இது.
தல வரலாறு:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவையில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டேன்ஸ் நிறுவனத்தின் காபி மற்றும் தேயிலைத்துாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்காக புற நகரில் குடியிருப்புகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அன்றைய காலத்தில் ஒண்டிப்புதுார் அருகில் பல ஏக்கர் பரப்பில் தொழிலாளர்களுக்காக ஸ்டேன்ஸ் காலனி அமைக்கப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொழில் சார்ந்த மக்கள் குடியேறியதால் தங்கள் பகுதியில் விநாயகர் கோயில் அமைத்து, தொழில் வெற்றி கிடைக்க விஜய கணபதி (ஜெயம்–வெற்றி) என்று வழிபட துவங்கினர். பின் காலப்போக்கில் அம்மன் சன்னதி வேண்டும் என எண்ணிய இவர்கள் மாரியம்மன் சன்னதி உள்பட ராகு–கேது, சந்திர பகவான் உள்ள பட பல சன்னதிகளை உருவாக்கி இன்று கோயிலாக உருவெடுத்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் விநாயகருக்காக உருவான முதல் கோயில் இது.
இருப்பிடம் : கோவையிலிருந்து திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். ஒண்டிப்புதுார் அடுத்த காமாட்சிபுரி என்ற ஸ்டாப்பில் இறங்க வேண்டும். சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் உள்ளது.