Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நட்சத்திர விருட்ச விநாயகர்
  உற்சவர்: விநாயகர்
  தல விருட்சம்: 27 நட்சத்திரம் மற்றும் 12 ராசி விருட்சங்கள் அமைந்துள்ளது.
  ஊர்: கூழமந்தல் ஏரிக்கரை
  மாவட்டம்: திருவண்ணாமலை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ்புத்தாண்டு, சித்ரா பௌவுர்ணமி கஜமுகா சதுர்த்தி, காணும் பொங்கல் 108 கோ பூஜை, ஆங்கிலப்புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சித்திரை பௌர்ணமி சூரன் வதம், வாரம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளும், சங்கடஉறர சதுர்த்தி, பிரதோஷ வழிபாடு.  
     
 தல சிறப்பு:
     
  ஸ்ரீகாஞ்சி மகா பெரியவாள் வழிகாட்டுதலின்படி முக்தியடைந்த தவத்திரு சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகளினால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நட்சத்திர அதிதேவதைகள் மற்றும் 27 விருட்சங்கள், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீசங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்புடைய திருக்கோயில் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 08.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில், கூழமந்தல் ஏரிக்கரை, செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 631701  
   
போன்:
   
  +91 9445120996, 6382122588, 6383171284 
    
 பொது தகவல்:
     
  உலகில் வேறு எங்கும் தரிசிக்க முடியாத ஜென்ம நட்சத்திரத்திற்கே உரிய அதிதேவதை திருக்கோமில் ஜென்ம நட்சத்திர வழிபாடு செய்ய தொடங்கினாலே தீமைகள் விலகி நன்மைகள் தொடங்கும்.  
     
 
பிரார்த்தனை
    
  பலவித தோஷங்கள், திருமண தடைகள், குழந்தை பாக்கியம், வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் தடைகள், பலவித துன்பங்கள் விலக என பல இன்னல்களிலிருந்து விடுபட பிராத்தனை செய்துக்கொள்ளலாம். அவரவருக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளை அறிந்து அந்நட்சத்திர நாளில் நட்சத்திர அதிதேவதைகளை வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும். பித்ரு தோஷம் நீங்கும். இங்கு அருள்பாலிக்கும் பித்ரு பகவானுக்கு அமாவாசை தினத்தில் அர்ச்சனை செய்துகொள்வது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  ஜென்ம நட்சத்திர தினத்தில் அவர்களுக்கு அதிதேவதைகளுக்கு அபிஷேகம் அல்லது அர்ச்சனை உரிய செய்வது, விருட்சங்களுக்கு பூஜை செய்து கலச நீர் கொண்டு மூன்று முறை விருட்சத்தினை வலம்வந்து நீர் விருட்சத்தின் வேர் பகுதியில் ஊற்றி வழிபாடு செய்வது. 
    
 தலபெருமை:
     
  இத்திருக்கோயிலில் முழுமுதற்கடவுள், மும்மூர்த்திகள், என்திசை பாலகர்கள், நவகிரகங்கள், 27 நட்சத்திர அதிதேவதைகள், அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமனியர், சமேத தேவகுரு (எ) பிரகஸ்பதி, ராகுகேது, சனீஸ்வரர் என அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். பிரதி தினம் நடைபெறும் நித்ய பூஜை காலத்தில் காகம் பிரசாத உணவு கேட்டு பெற்று உண்ணும் அற்புத நிகழ்வு இன்றும் நடைபெறுகிறது. விநாயகரின் உத்திரவு கிடைத்தால் மட்டுமே இத்திருக்கோயிலுக்கு வரமுடியும்.  
     
  தல வரலாறு:
     
  ஸ்ரீகாஞ்சி மகா பெரியவாள் வழிகாட்டுதலின்படி முக்தியடைந்த தவத்திரு சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகளினால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நட்சத்திர அதிதேவதைகள் மற்றும் 27 விருட்சங்கள், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீசங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்புடைய திருக்கோயில் ஆகும்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 27 நட்சத்திரம் மற்றும் 12 ராசி விருட்சங்கள் அமைந்துள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar