Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன்
  தல விருட்சம்: மாவிலிங்க மரம்
  ஊர்: சூலக்கல்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை மாதம் கடைசி செவ்வாய் தேர்த்திருவிழா கடந்த 200 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பகுதியின் சுற்று வட்டாரத்திலுள்ள கோயில்களுக்கெல்லாம் இங்கிருந்து தீர்த்தம் கொண்டு சென்று, அங்கு அபிஷேகம் செய்த பின் தான் திருவிழா கொண்டாடுகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிக சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில் , சூலக்கல் - 642110 கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4259- 246246 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்தின் நுழைவு வாயிலில் தீபஸ்தம்பமும் அடுத்து கொடி மரமும் நம்மை வரவேற்கிறது. இடது பக்கம் தீர்த்தக்கிணறு அமைந்துள்ளது.

ஆளுயர மதில் சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் வீடுகள் இல்லை; இரும்புக் கதவுகளால் அடைக்கப்பட்ட வாசல்கள் இல்லை. ஆனால், எவர்வரினும் வரவேற்று அமர வைக்கும் திண்ணை வைத்த ஓட்டு வீடுகள் நிறைந்திருக்கின்றன. அன்று, விடுமுறை தினம் என்பதால், பொடியன்கள் சுழற்றிய பம்பரங்கள் தெருக்களில் சுழன்று கொண்டிருந்தன. கிராமத்தில் விவசாயமே பிரதான தொழில் என்றாலும், 'கார்டன் சிட்டி'களாக விளைநிலங்கள் மாறி வரும் அவலமும் அரங்கேறுகிறது. கூலி ஆட்களின் பற்றாக்குறையால் தென்னை வளர்ப்பும், நிலத்தடி நீர் பற்றாக்குறையால் வேர்க்கடலை, சாமை, தக்காளி சாகுபடியும் செய்யப்படுகின்றன. சீரிய பொருளாதார வளர்ச்சி இல்லை என்றாலும், பழமையும், அமைதியுமாய் பாங்குடன் இருக்கிறது சூலக்கல் கிராமம். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும், 16 நாள் திருவிழா மிகவும் பிரசித்தம்! திருவிழாவின் போது, கேரள மக்கள் கூட்டம் அதிகம் இருக்குமாம்!
 
     
 
பிரார்த்தனை
    
  கண் சம்பந்தப்பட்ட நோயை விரைவில் தீர்த்து வைப்பது சூலக்கல் மாரியின் தனி சிறப்பாகும்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சூலக்கல் மாரியம்மன் சன்னதியில் தங்கி காலை, மாலை இரு நேரமும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை கண்ணில் இட்டுக் கொள்கின்றனர். அம்மனின் அருளால் கண்நோய் விரைவில் குணமாகிறது.

மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து மகமாயியை வழிபட்டு தல விருட்சமான மாவிலிங்க மரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  சூலக்கல் மாரி வடக்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளதால் "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே செய்யப்படுகிறது. சுயம்புவின் அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார்.

கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோயில்களில் சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது.

சுமார் 400 ஆண்டு பழமையான கருவறையில் அருள் வழங்கும் அம்மனாக மாரியம்மன், வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கைகளில் உடுக்கையும், கத்தியும், இடது கைகளில் சூலமும் கபாலமும் தாங்கி இருக்கிறாள்.
 
     
  தல வரலாறு:
     
  வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பசுக்கள் சூலக்கல் பகுதிக்கு மேய வந்தன. மாலையில் திரும்பும் போது பசுக்களின் பால் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதை கண்டுபிடிப்பதற்காக விவசாயிகள் பசுக்கள் மேயும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது பசுக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஓரிடத்தில் மொத்தமாக பால் சுரந்து கொண்டிருந்தது.

இதைக்கண்ட விவசாயிகள் அந்த பசுக்களை விரட்ட மாடுகள் மிரண்டு போய் ஓடியது. அப்போது ஒரு மாட்டின் கால், பால் சுரந்த இடத்தில் மாட்டிக்கொண்டது. மாடு காலை உருவிக்கொண்டு ஓடிய போது அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த சுயம்பு வெளிப்பட்டு சிறிது சேதமடைந்தது.

(சூலக்கல் மாரியம்மன் கோயிலில் உள்ள சுயம்பு மூர்த்தியில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது) சுயம்பு வடிவ கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக்கண்ட விவசாயிகள் இந்த பகுதியை சூலக்கல் என அழைத்தனர்.

பசுவின் சொந்தக்காரர் கனவில் தோன்றிய அம்பிகை, சூலக்கல்லில் சுயம்புவாக உருவெடுத்திருப்பதையும், சுயம்புவை சுற்றி கோயில் எடுக்குமாறும் அருளினார். அதன்படி சுயம்பு மூர்த்திக்கு கருவறை மண்டபமும், மகாமண்டபமும் அமைக்கப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது. பொள்ளாச்சி - கிணத்துக்கடவு சாலையில் இருக்கும் கோவில்பாளையத்தில் இருந்து, இடதுபுறமாக, 5 கி.மீ., பயணித்தால் சூலக்கல்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar