Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோதண்ட ராமர்
  ஊர்: கந்தர்வகோட்டை
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலில் ராமநவமி கோலாகலமாக நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  மாதத்தில், 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் காலையில் கோதண்டராமரின் திருவடியில் சூரிய வெளிச்சம் விழுந்து நமஸ்கரித்துச் செல்லும் என்பது கோயிலின் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கே கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறவும், திருமண பாக்கியம் கைகூடவும் இங்கு வந்து சுவாமியை பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இங்கேயுள்ள ஸ்ரீஅனுமன், மிகுந்த வரப்பிரசாதி. தொடர்ந்து 11 சனிக்கிழமைகள், இவருக்கு நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து, தயிர்சாதம் அல்லது வடைமாலை சார்த்தி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்று, வளமுடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். 
    
 தலபெருமை:
     
  புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டமான் மகாராஜா, இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார் என்கின்றன கோயில் கல்வெட்டுகள். அழகிய கோயில். அற்புதமான கோலத்தில் சீதாதேவி லட்சுமணர் சமேதராக கோதண்டராமர். இவரைத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.  
     
  தல வரலாறு:
     
  சைவம் தழைத்தோங்கிய காலம் அது! பரந்து விரிந்த சோழ தேசத்தின் எல்லா கிராமங்களிலும் பிரமாண்டமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களும் மாடுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டு, செவ்வனே பராமரிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் பாண்டிய தேசத்திலும், சேர நாட்டிலும், பல்லவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஊர்களிலும் வைணவம் சிறப்புறத் தழைத்திருந்தது. எங்கு திரும்பினாலும் சிவாலயங்களும் வைணவக் கோயில்களும் சரிசமமாகவே இருந்தன. ஊரில் ஏதேனும் விசேஷம், மன்னருக்குப் பாராட்டு என்று வருகிறபோதெல்லாம், கூத்துக் கட்டி, ஆடிப் பாடுதல் அரங்கேறின. சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அப்படி நடக்கிறபோது, புராணச் சம்பவங்களை விவரித்துக் கொண்டே வந்து, இறுதியில் நம் தேசத்து மன்னனும் அந்த குணங்களைக் கொண்டவன்தான் என்று நீதி சொல்கிற, பாராட்டு மழை பொழிகிற விழாக்களும் கேளிக்கைகளும் ஆங்காங்கே நடந்தன. அவற்றில், எந்த மன்னன் ஆட்சி செய்தாலும் நீண்ட நெடிய விளக்கங்களுடன் சொல்லப்படுவது, ராமாயணக் கதையாகத்தான் இருக்கும். ஸ்ரீராமரின் அருமை பெருமைகளையும் சீதாதேவியின் உறுதியான நம்பிக்கையையும் விவரிக்கும்போதே, மொத்த மக்களும் கண்ணீருடன் கேட்பார்கள். சிவனாரின்மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில், ஸ்ரீகோதண்ட ராமருக்கு ஆழகிய கோயிலைக் கட்டினான். கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகளை அமைத்தான். அந்தணர்களுக்கு நிலங்களையும் வீடுகளையும் ஆடு-மாடுகளையும் தானமாகத் தந்தான். கோயிலுக்கு ஏராளமான நிலங்களை எழுதி வைத்து, நித்தியப்படி பூஜைகள் குறையற நடக்க ஏற்பாடுகள் செய்தான். கோதண்டராமர் கோயிலில் வழிபாடுகள் நடக்க நடக்க.. சோழ தேசம் இன்னும் இன்னும் செழித்ததாகச் சொல்வர். கண்டராதித்த மன்னன் கட்டிய கோயிலை இன்றைக்கும் தரிசிக்கலாம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மாதத்தில், 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் காலையில் கோதண்டராமரின் திருவடியில் சூரிய வெளிச்சம் விழுந்து நமஸ்கரித்துச் செல்லும் என்பது கோயிலின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar