அமாவாசை மற்றும் பவுர்ணமி, சத்யநாராயண பூஜை மாதாமாதம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருக்கல்யாண பங்குனி மாதம் நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பொங்காளி அம்மன் திருக்கோயில்,
நல்லாம்பாளையம்,
கணபதி கிராமம்,
கோயம்புத்தூர்-641006.
போன்:
+91 94437 38532, 94425 12228, 97871 38837
பொது தகவல்:
இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் சால விநாயகர், ஆதி பொங்காளி அம்மன், கருப்பராயன், சிம்ம வாகனமும், கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபமும் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
இங்கு அம்மனை வேண்டி அனைத்துவிதமான பிரார்த்தனைகள் நிறைவேறுவதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டு புடவை சாற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
இக்கோயில் 1860-ல் பல்லடத்தில் எழுந்தருளியுள்ள பொங்காளி அம்மன் கோயிலில் இருந்து கோவை நல்லாம்பாளையம் பகுதியில், மாடகுல அன்பர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது. பால வேளாளர் கவுண்டர் இனத்தில் மாடகுல அன்பர்களின் திருத்தலமாக விளங்குகிறது.
இருப்பிடம் : கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் , கவுண்டம்பாளையத்திலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை கி.மீ., தூரத்தில் உள்ள நல்லாம்பாளையத்தில் கோயில் அமைந்துள்ளது .
அருகிலுள்ள ரயில் நிலையம் :
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
கோயம்புத்தூர் (பீளமேடு)