Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வீரப்ப அய்யனார்
  ஊர்: அல்லிநகரம்
  மாவட்டம்: தேனி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நித்யகால பூஜைகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை, அபிஷேக, ஆராதனை உண்டு. மஹா சிவராத்திரி, தைப்பூசம், வைகாசி விசாகம், பிரதோஷம், பவுர்ணமி பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடப்பதுண்டு. ஆண்டு முழுவதும் பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தாலும் சித்திரை முதல் தேதி அன்று கொண்டாடப்படும் திருவிழாவில் பெரும் எழுச்சி காணப்படும். நாள் முழுவதும் நடக்கும் இத்திருவிழாவில் சுற்றுப்புற கிராமப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அய்யனாரைத் தரிசிக்க திரளாகக் கூடுவர். பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள், மக்களின் கோலாகலம் வனப்பகுதியில் எதிரொலித்துக் கொண்டிருக்கும். பங்குனி கடைசி நாளில் வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் தனது அண்ணனான தேனி பங்களாமேட்டில் உள்ள சோலைமலை அய்யனாரை தரிசிக்க கிளம்புவார். அப்போது பால்குடம், காவடி ஆட்டம் உள்பட பல்வேறு வைபவங்கள் இடம் பெறும். சுவாமி பின் இரவு 11 மணி அளவில் கோயில் வந்தடைவார். சித்திரை 3-ல் மறுபூஜை நடைபெறும். சித்திரை முதல் தேதியில் வெளிப்பட்டதால் இன்றும் அந்நாளிலேயே திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள வீரப்ப அய்யனார் சுயம்புவாக தோன்றியவர். அதுமட்டுமின்றி கருவறை விக்ரகங்கள் உலோகத்தால் செய்யாமல் கருங்கற்களிலே செய்கிறார்கள். இதற்குக் காரணம் கற்கள் செம்பின் ஆற்றலை விட பல மடங்கு அதிகமானது. கல் எந்தப் பொருளையும் தன்பால் இழுத்துக் கொள்ளும் சக்தியுடையது.  
     
திறக்கும் நேரம்:
    
 தினமும் காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரை கோயில் திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், அல்லிநகரம், தேனி. 625531  
   
போன்:
   
  +91 98422-42532, 94867-83238 
    
 பொது தகவல்:
     
   கோயிலின் வெளிப்பகுதியில் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் சாஸ்தா, கருப்பசாமி, கன்னிமார் தெய்வங்கள், விநாயகர் முருகப்பெருமான், அழகர்ப் பெருமாள் ஆகிய தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர். தேனி (அல்லிநகரத்திற்கு மேற்கே) வீரப்ப அய்யனார் கோயில் அமைந்இதனை ஒட்டியே பனசல் ஆறு ஓடுகிறது. மலைப்பகுதியில் உருவாவதால் நீர் தெளிவாகவும், தூய்மையானதாகவும், ருசியானதாகவும் இருக்கிறது. மலையடிவாரம் என்பதால் பிரம்மாண்டமாக, விண்ணை முட்டும் மரங்கள் ஆங்காங்கே உள்ளன. இனம் தெரியாத தாவரங்கள், மூலிகை செடிகள், எளிதாக ஏறிச் சென்று விட முடியாத அளவிற்கு மரத்தின் உச்சியில் பெரிய அளவிலான தேனடைகள் என்று கோயில் வளாகத்தில் இயற்கை எழில் கொஞ்சுகிறது.

வீரப்பையா சுவாமியை வணங்க மந்திரங்கள் உள்ளன. அவை

ஓம் சிவாயநம:
ஓம் சம்பவே நம:
ஓம் மகேச்சுவராய நம: என்று 3 தடவை கூறி தீபாராதனை செய்து நமஸ்கரிக்க வேண்டும். பின்பு

காவேரி துங்க பத்ராச
க்ருஷ்ணவேணீச கௌதமீ!
பாகீரதிச விச்யாதாம்                
பஞ்சகாங்கா ப்ரகீர்த்திதாம்!!
கலசோதகேன பூஜாத்ரவ்யாணி ஸம்ப்ரோக்ஷ்ய! என்று சொல்லி
கலச நீரால் வெற்றிலை அல்லது பூவால் பூஜாத்ரவியங்கள் மீதும் லிங்கம் மீதும் தெளித்துப் பின் தலைமீதும் தெளித்துக் கொள்ள வேண்டும்.

கோயிலை அல்லிநகரம் கிராமக் கமிட்டியினர் நிர்வகித்து வருகின்றனர். கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் சுவாமி அருள் இறங்கி சம்பந்தப்பட்டவரின் குறைகளைக் களைய அருளாசி வழங்குவார் என்பது நம்பிக்கை. ஆலய தரிசனம் முடிந்ததும் அடுத்தவர் வீட்டிற்குச் சென்றால் தரிசன பலன் அவர்களைச் சென்றடைந்து விடும் என்பது தவறான கருத்தாகும். வேண்டுதல் தள்ளிப் போனால் நேர்த்திக் கடனை விட சற்று கூடுதலாக செய்ய வேண்டும்.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை, வியாபாரத்தில் நஷ்டம், கடன் பிரச்னை போன்றவற்றை பிரார்த்திப்பதால் பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்களது பிரச்சனை தீர்ந்தவுடன் கோயிலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். வீரப்ப அய்யனாருக்கு உகந்த மலர் மல்லிகை. ரோஜாப்பூவையும் சிலர் வழிபாட்டிற்கு அளிப்பதுண்டு. பிடித்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். பொதுமக்கள் மட்டுமில்லாது கால்நடைகளையும் காவல் காத்து வருவதால் அய்யனார் ஆடு போன்றவற்றை பலியிடுதலை விரும்புவதில்லை. இதனால் இப்பகுதியில் ஆடு வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அருகில் உள்ள கருப்பசாமி கோயிலில் பக்தர்கள் ஆடு வெட்டி படைத்து அன்னதானம் அளித்து மகிழ்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  வீரப்ப அய்யனார் சுயம்பு தோற்றம் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளை இன்று இலகுவாக போட முடியாததைக் கொண்டு இதன் வளர்ச்சியை அறியலாம். புதுக்கணக்கு துவங்குதல், அன்னதானம் போன்ற நேர்த்திக்கடனை செலுத்த தேனி வியாபாரிகள் பலரும் இந்த ஸ்தலத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பலவித மனஅழுத்தத்தை இந்த அமைதி நிறைந்த வனப்பகுதி தீர்த்து வைப்பதால் ஒருநாள் முழுவதும் உண்டு.

உறங்கி தங்களை புதுப்பித்துக் கொள்கின்றனர். மேலும் பொதுமக்களும் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் இப்பகுதிக்கு பிக்னிக் போல வந்து அய்யனார் தரிசனம் செய்கின்றனர். தங்கள் உறவினர்களுடன் நாள் முழுவதும் தங்கி அளாவளாவி மகிழ்கின்றனர். வாழ்க்கையில் ஏற்படும் குறைகளை நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது. கருவறை விக்ரகங்கள் உலோகத்தால் செய்யாமல் கருங்கற்களிலே செய்கிறார்கள். இதற்குக் காரணம் கற்கள் செம்பின் ஆற்றலை விட பல மடங்கு அதிகமானது. கல் எந்தப் பொருளையும் தன்பால் இழுத்துக் கொள்ளும் சக்தியுடையது. கல்லில் பஞ்சபூதங்களின் தன்மையும் விசேஷமாக அடங்கி இருந்து வெளிப்படுதல் போல மற்ற உலோகங்களில் இல்லை.

ஆகாயத்தை போல வெளியில் உள்ள சத்தத்தை தன்னகத்தே இழுத்து ஒடுங்கிப் பின்னர் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. கல்லிலே காற்று, நெருப்பு உண்டு. கல்லில் நீர் உள்ளது. அதனால் தன் இயல்பான குளிர்ந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறது. கல்லில் கடைசிபூதமான நிலம் உள்ளது. ஆகவேதான் ஐம்பூத வடிவான ஆண்டவன் உருவம். ஐம்பூதப் பொருளான கல்லில் வீற்றிருக்கும்படி செய்து வழிபடுகின்றனர். கோயிலுக்கு அருகிலே தர்கா அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்தி கொளுத்தி, வணங்கிச் செல்வதுண்டு. இருமத வழிபாட்டு தலங்கள் அருகருகே உள்ளன. அவரவர் வழிபாட்டுகளில் கவனம் செலுத்துகின்றனர். இது மதநல்லிணக்கத்திற்கு முன் உதாரணமாக விளங்குகிறது.
 
     
  தல வரலாறு:
     
  300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அல்லிநகரம்- பூதிப்புரம் கிராமவாசிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். நன்றாக மேய்ந்தாலும் வீட்டிற்கு வந்தால் பல மாடுகள் பால் கறப்பதே இல்லை. இதனால் மேயும் இடங்களுக்குச் சென்று பாலை கறந்து கொண்டு வந்தனர். அப்போது ஒருநாள் கோயில் அமைவிடப் பகுதியில் (சுவாமி வெளிப்படாத காலம் அது) வந்ததும் தவறி விழுந்தனர். கையில் இருந்த பாத்திரங்கள் உருண்டோடின. கீழே சிந்திய பால் உடனே காணாமல் போயின. அப்போது யாரோ அதனை குடிக்கும் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு பொதுமக்கள் மிரண்டு ஓடினர். பலமுறை இது போன்று நிகழ்ந்ததால் இச்செயல் கிராமம் முழுவதும் பரவியது. அனைவருக்கும் வியப்பும், திகைப்பும் ஏற்பட்டது.

உண்மை நிலையை அறியும் பொருட்டு சித்திரை முதல் நாளில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஏராளமானோர் கூடினர். அப்போது அவர்களுள் ஒருவருக்குள் சுவாமி உட்புகுந்து அருள்வாக்கு கூறத் துவங்கினார். அதில், உங்களை காப்பாற்றும் பொருட்டே நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். என் பெயர் வீரப்பையா. நான் தற்சமயம் பூமிக்குள் மறைந்திருக்கிறேன். என்னை மேலே கொண்டு வாருங்கள் என்று கூறியதாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு. இப்பகுதியில் சென்ற விவசாயி ஒருவரின் கோடாரி கைநழுவி மாமரத்தின் வேரில் விழுந்தது. வேரில் இருந்து ரத்தம் பீறிட்டது. அந்த சமயத்தில் ஒரு அசரீரி, என் பெயர் வீரப்பையா. நான் பூமிக்குள் இருக்கிறேன். என்னை வெளியே கொண்டு வாருங்கள் என்றதாகவும் செவி வழிச் செய்தி உண்டு. இவ்வாறு சுயம்புத் தோற்றம் சித்திரை முதல் தேதியில் வெளிப்பட்டது. சுவாமியின் இஷ்ட வாகனம் குதிரை. குதிரையிலே அய்யனார் இரவுக் காவலில் ஈடுபடுவார்.

சுற்றுப்புற வனப்பகுதி தோட்டங்கள், விளைச்சல் பகுதிகள், குடியிருப்புகளில் வலம் வருவதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை உண்டு. இதற்கு ஆதாரமாக இரவு நேரங்களில் குதிரையின் குளம்பொலி சப்தத்தை பலரும் கேட்டதாக கூறுகின்றனர். கோயில் கருவறையில் லிங்க வடிவிலான சுயம்புத் தோற்றமே இருப்பதால் பக்தர்கள் அய்யனாரை குதிரையில் ஏற்றி பார்க்க ஆசைப்பட்டனர். இதற்காக கோயிலின் நுழைவுப் பகுதியில் பிரம்மாண்டமான குதிரையில் முறுக்கு மீசையுடன் வாள் ஏந்திய அய்யனார் சிலை அமைக்கப்பட்டது. காவல் தெய்வத்தின் கண்ணில் தெரியும் கனலின் தகிப்பில் இப்பகுதியில் இதுவரை பிரச்னை எதுவும் ஏற்பட்டதில்லை. சிவ அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சுவாமியின் கருவறைக்கு மேற்கூரை கிடையாது. சுயம்பு தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே உகந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த நடைமுறை இன்றும் வழக்கத்தில் உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள வீரப்ப அய்யனார் சுயம்புவாக தோன்றியவர். அதுமட்டுமின்றி கருவறை விக்ரகங்கள் உலோகத்தால் செய்யாமல் கருங்கற்களிலே செய்கிறார்கள். இதற்குக் காரணம் கற்கள் செம்பின் ஆற்றலை விட பல மடங்கு அதிகமானது. கல் எந்தப் பொருளையும் தன்பால் இழுத்துக் கொள்ளும் சக்தியுடையது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar