மது, கைடபர் என்னும் அரக்கர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டவர் ஹயக்ரீவர். குதிரை முகம், மனித உடல் கொண்ட இவர், கல்வி வளம் தருவதால் வித்யா ராஜன் எனப்படுகிறார். இவரை வழிபட்ட அடியவர்களில் வாதிராஜர் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் தினமும் ஹயக்ரீவருக்கு ஹயக்ரீவ பண்டி என்னும் பிரசாதம் படைப்பது வழக்கம். கடலைப்பருப்பு, வெல்லம், நெய், தேங்காயால் செய்யப்பட்ட இதை வாதிராஜர் தலையில் சுமந்து நிற்க, குதிரை வடிவில் தோன்றி முன்கால்களை வாதிராஜரின் தோள் மீது ஹயக்ரீவர் வைத்தபடி புசிப்பார். மீதியை வாதிராஜர் பிரசாதமாக நினைத்து உண்பார்.