வேதங்களைத் தொகுத்து வகைப்படுத்தியவர் வேத வியாசர். மேலும் அவர், பைல முனிவர் மூலம் ரிக், வைசம்பாயனர் மூலம் யஜுர், ஜைமினி முனிவர் மூலம் சாமம், சுமந்து என்பவர் மூலம் அதர்வணம் - என சிஷ்ய பரம்பரை முறையில் வேதங்களைக் கற்பிக்க வழி செய்தார். வேதங்களின் உட்கருத்துகளை உணர்ந்து கொள்ள 18 புராணங்களையும் இயற்றினார். எனினும், வேத வியாசரின் மனதில் அமைதி இல்லை. இதை நாரதரிடம் கூறினார். உடனே அவர், ""முனிவரே... புராணங்களையும், சாஸ்திர ங்களையும் மட்டுமல்லாது பகவானுடைய பூரண குணங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். எனவே, பகவானின் கல்யாண குணங்களைப் பேசும் ஒரு நூலை நீர் இயற்றும்.” என்றார். அதன்படி ஸ்ரீமத் பாகவதம் எனும் நூலை இயற்றினார் வியாசர்.