கூட்டம் கூட்டமாய் பவுர்ணமி நாளில் அண்ணாமலையை சுற்றி வந்திருப்பீர்கள். ஆனால் ஆண்டுக்கு இருமுறை மட்டும் அண்ணாமலையாரோடு கிரிவலம் சுற்றலாம். எப்படி? திருக்கார்த்திகைக்கு மறுநாளும், தை மாதம் மூன்றாம் நாளும் அண்ணாமலையாரே கிரிவலம் வருவார். அன்று ""அண்ணாமலைக்கு அரோகரா” சொல்லியபடி சுவாமியோடு மலையை சுற்றி வந்தால் பிறவிப் பயன் பெறலாம்.