பதிவு செய்த நாள்
12
டிச
2019
03:12
பூரி ஜெகநாதர் கோயில் காலை முதல் இரவு வரை ஆறு கால நைவேத்யங்கள் நடைபெறுகின்றன.
சோபால வல்லபபோகா: இது காலையில் பகவானுக்குச் செய்யப்படும் நைவேத்யம். பக்தர்களுக்கு விநியோகம் கிடையாது.
சகல தூபா போகா: காலை 10 மணிக்கு நடக்கும் இந்த நைவேத்யத்தில் என்டூரி கேக்குகள், புளிசாதம் உட்பட 13 உணவு வகைகள் வைக்கப்படுகின்றன. இவற்றில் சாதங்கள் விற்பனைக்கு வெளியே வருகின்றன.
படா சங்க்ருதி போகா: காலை 11 மணிக்குச் செய்யப்படும் இந்த நைவேத்யம் ஆதிசங்கராசாரியாரால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இது முடிந்ததும், அந்த பிரசாதங்கள் அனைத்தையும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டுமென ராஜாவிடம் அவர் கூறினாராம். ஆக இவை பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மத்யான தூபா: பிற்பகல் 12 மணிக்கு செய்யப்படும் இது பக்தர்களுக்குக் கிடையாது.
சந்த்யா தூபா போகா: இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த நைவேத்யமும் பக்தர்களுக்குத் தரப்படுவதில்லை.
படா சிம்ஹாரா தூபாபோகா: இரவு கால நைவேத்யம், இரவு 9.30 மணிக்கு மேல் இனிப்புப் பலகாரங்கள், இளநீர், தேங்காய் சாதம், தயிர் வாழைப்பழங்கள் பக்தர்களுக்கு குறைந்து விலையில் விற்கப்படுகின்றன. பூரி ஜெகநாதர் கோயில் தயாரிக்கப்படும் 100 வகையான நைவேத்யங்கள் இரு வகைப்படும். அவை 1. பக்கா, 2. சுக்கா. பக்கா -வேக வைத்துத் தயாரிக்கப்படுவை. சுக்கா -ரொட்டி, பிஸ்கெட்டு, கேக்குகள், இனிப்புப் பண்டங்கள். பூரி கோயில் சமையலறையில் அன்ன சவுலி அகியா சவுலி, பிதா சவுலி என 3 வித அடுப்புகள் உள்ளன.
அன்னசவுலி: அன்னங்கள் தயாராகின்றன.
அகியாசவுலி: வேக வைக்கப் பயன்படுகின்றன.
பிதா சவுலி: இது கோயிலுக்குள்ளிருக்கும் எமர்ஜென்சி சிறுசமையலறையாகும். அங்கு சிமெண்ட் அடுப்புகள் உள்ளன. அங்கு ஏற்றப்படும் அக்னியை வைஷ்ண அக்னி என்கின்றனர்.