"கிரகணக் காலத்தில் கோயில்களில் பூஜைகள் நடத்தக்கூடாது என்பது விதி. ஆனால், கிரகண நேரத்தில் திறந்திருக்கும் கோயில் ஒன்றும் உள்ளது. கர்ப்பிணிகளும் அந்த நேரத்தில் அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். கும்பகோணம் அருகிலுள்ள திருநாறையூர் சிவன் கோயில்தான் அது. சனி பகவான், மனைவி, குழந்தைகளுடன் குடும்ப சமேதராக அருள்பாலிக்கும் அற்புதக் கோயில் இது.