சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்யும் போது மருந்து சாத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2020 03:01
எட்டு மூலிகைகள் ஆன மருந்தினை அஷ்டபந்தனம் என்பர். சுவாமி சிலையை, பீடத்துடன் இணைக்கும் இந்த மருந்து தெய்வீகம் நிறைந்தது. இதில் குறை நேர்ந்தால் கும்பாபிஷேகம் பலனற்றுப் போகும். சாத்திய மருந்து இல்லாமல் போனால் நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்குண்டாகும். இந்நிலையில் நாள், நட்சத்திரம் கூட பார்க்காமல் புதிதாக மருந்து சாத்தி கும்பாபிஷேகம் நடத்துவர்.