முன்னோருக்கு அமாவாசை தர்ப்பணம், சிராத்தம் செய்வதால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் பிதுர்சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதற்காக ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு போன்ற திருத்தலங்களில் பரிகாரம் செய்யலாம். பின்னர் ஆண்டுதோறும் தவறாமல் தர்ப்பணம், திதி செய்வது அவசியம்.