Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆற்றங்கரைகளில் கோயில்கள் இருப்பது ... சித்ராபவுர்ணமியன்று இதை படிங்க.. சித்ராபவுர்ணமியன்று இதை படிங்க..
முதல் பக்கம் » துளிகள்
கடன் பிரச்னை தீர்க்கும் ஆதிநரசிம்மர்
எழுத்தின் அளவு:
கடன் பிரச்னை தீர்க்கும் ஆதிநரசிம்மர்

பதிவு செய்த நாள்

07 மே
2020
03:05

நாகபட்டினம் மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருக்குறையலுாரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும். 


பார்வதியின் தந்தையான தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்கவில்லை. கோபம் கொண்ட பார்வதி நியாயம் கேட்டு புறப்பட்டாள். மகளையும் தட்சன் அவமதிக்கவே, அவள் யாகத்தீயில் விழுந்து உயிர் நீத்தாள். கோபம் அடைந்த சிவன் தன் அம்சமான வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி வைத்தார். யாகத்தை அழித்த அவர்,  அதில் பங்கேற்ற தேவர்களைத் தண்டித்தார். பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் மனம் வாடினார். அவரது மனக்குறை போக்கும் விதமாக  ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நரசிம்மர் காட்சியளித்து அமைதிப்படுத்தினார். இத்தலத்தில் மூலவராக அவரே கோயில் கொண்டிருக்கிறார்.  இங்கு வழிபட்டால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
திருமங்கையாழ்வாரின் அவதார தலமான இங்கு தை அமாவாசையை ஒட்டி இத்தலத்திற்கு அருகிலுள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும். அப்போது திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள ‘திருப்பால்லாண்டு தொடக்கம்’ என்னும் தமிழ் மறை பாடி வழிபடும் வைபவம் நடக்கும்.

பழமையான இத்தலம் ‘ஆதிநரசிம்மர் தலம்’ என்றும், தென்னிந்தியாவின் சிறந்த நரசிம்ம ேக்ஷத்திரம் என்பதால் ‘தட்சிண நரசிம்மர் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மூலவருக்கு பிரதோஷத்தன்று  விசேஷ பூஜை நடக்கும். மனநல பாதிப்பு, கடன் தொல்லை, குடும்ப பிரச்னை தீர சுவாதி நட்சத்திரத்தன்று நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்கின்றனர்.  அமிர்தவல்லித்தாயார், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி உள்ளது. அமாவாசையன்று இங்கு நடக்கும் சுதர்சன ேஹாமத்தில் பங்கேற்றால் கிரக, பித்ரு தோஷம் நீங்கும்.


செல்வது எப்படி: சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 10 கி.மீ., துாரத்தில் மங்கைமடம்., அங்கிருந்து 2 கி.மீ.,

நேரம்: காலை 8:00 – 11:00 மணி, மாலை 4:00 – இரவு 7 மணி
தொடர்புக்கு: 94435 64650, 94430 07412

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar