சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே. தொண்டணை செய்தொழில் துயர் அறுத்து உய்யலாம்வண்டணைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்பெண்துணை யாகவோர் பெருந்தகை இருந்ததே. அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமேநியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே. அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமேவிடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே. மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபலகற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே.குறைவளை அதுமொழி குறைவொழி நெஞ்சமேநிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே. அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிடநெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவேகருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே.நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர்அடியொடு முடியறியா அழல் உருவினன்கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே. தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே. கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்தனைஅருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.