17ம் நுாற்றாண்டில் டச்சுக்காரர்கள் திருச்செந்துார் முருகன் உற்ஸவர் சிலையைக் கடத்தினர். ஆனால் புயல் வரவே, சிலையை கடலுக்குள் போட்டு தப்பித்தனர். ஐந்தாண்டுகள் வரை சிலை இல்லாததால் வழிபாடு நடக்கவில்லை. முருகபக்தரான வடமலையப்ப பிள்ளை என்பவர் புதிய சிலை வடிக்க முடிவெடுத்தார். அவரது கனவில் தோன்றிய முருகன், கடலுக்குள் சிலை கிடப்பதை உணர்த்தினார். பணியாளர்களுடன் படகில் புறப்பட்ட அவர், கடலுக்குள் ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் மிதக்கக் கண்டார். அந்த இடத்தில் பணியாளர்கள் மூழ்கிப் பார்த்த போது சிலை கிடைத்தது. மீண்டும் உற்ஸவர் முருகனுக்கு வழிபாடு தொடங்கியது.