தெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்னும் பெயர் உண்டு. சிவனுக்கு ‘கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர்’ என்ற பெயர் உண்டு. அழகர்கோவிலில் உள்ள பெருமாள் ‘சுந்தரராஜப் பெருமாள்’ என அழைக்கப்படுகிறார். ராமதுாதனான அனுமனை அவனது தாய் அஞ்சனை ‘சுந்தரா’ என அழைத்து மகிழ்வார். இந்த மூன்று சுந்தரர்களுக்கும் உரிய மந்திரங்களான ‘ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஸ்ரீராமதாச ஆஞ்சநேய’ என்று தினமும் சொல்லி வருவோருக்கு முகம் பொலிவுடன் விளங்கும்.