அயோத்தி மன்னர் தசரதரின் மகன் ராமன் அரண்மனையில் பிறந்தவர். செல்வச் செழிப்பில் மிதந்தவர். மூத்த மகன் என்ற முறையில் நாடாள வேண்டிய நிலையில், தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற தான் மட்டுமின்றி, தன் மனைவி, தம்பியுடன் காட்டிற்கு புறப்பட்டார். அவரைப் பார்க்க அவரது தம்பி பரதனும் காட்டுக்கு வந்தான். அங்கு வந்த பிறகே, பட்டு விரிப்பில் மலர் துாவி நடந்த அவர்கள் அனைவரும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கஷ்டத்தை உணர்ந்தனர். நாடாளும் மன்னராக இருந்தாலும் சாமான்ய மக்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும் என்பதை இதன் மூலம் உலகுக்கு தெரிவித்தார் ராம பிரான். இன்றைய அரசியல்வாதிகள் மக்கள் கஷ்டத்தை பற்றி சிந்தித்தால் மீண்டும் ராம ராஜ்யம் மலரும்.