Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாங்கல்யம் காக்கும் மங்களாம்பிகை ஆடியில் அம்மன் அருள் பெற படியுங்கள் ஆடியில் அம்மன் அருள் பெற படியுங்கள்
முதல் பக்கம் » துளிகள்
மதுரை அரசாளும் மீனாட்சி! மாநகர் காஞ்சியிலே காமாட்சி!!
எழுத்தின் அளவு:
மதுரை அரசாளும் மீனாட்சி! மாநகர் காஞ்சியிலே காமாட்சி!!

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
01:07

ஆடியில் அம்பிகை வழிபாடு ஊரெங்கும் களைகட்டும்.  ஆதிபராசக்தியான அவளே இந்த உலகையே ஆட்சி செய்கிறாள். இந்த தருணத்தில் பராசக்தி என்பதற்குரிய விளக்கத்தை தெரிந்து கொள்வோமா!


ஆதி காலத்தில் ஒளி தோன்றியது. அந்த ஒளியில் ஆதிசக்தியான அம்பிகை தோன்றினாள். படைக்கும் கடவுளான பிரம்மாவையும், காக்கும் கடவுளாக மகாவிஷ்ணுவையும், அழிக்கும் கடவுளாக சிவனையும் படைத்தவள் சக்தியே. அந்த ஆதிசக்தியே கல்விக்குரிய கலைமகளாக, செல்வத்திற்குரிய அலைமகளாக, வீரத்திற்குரிய மலைமகளாகவும் அருள்புரிகிறாள். தாய்க்கெல்லாம் தாயாக இருக்கும் இந்த சக்தி உயர்ந்தவள் என்பதாலேயே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதன்மையாக வைத்தனர் நம் முன்னோர்கள். ‘அன்னையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை’ என்னும் சொல் வழக்கும் இதனால் தான் உண்டானது. இந்த ஆதிசக்தியை பராசக்தி என்றும் குறிப்பிடுவர். ‘பரா’ என்றால் அளவிட முடியாதது என்பது பொருள். அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் பராசக்தி எனப்பட்டாள். இவளே ஒவ்வொரு திருத்தலங்களிலும் ஒவ்வொரு திருநாமங்களில் வழங்கப்படுகிறாள். மதுரையில் மீனாட்சியாக, காஞ்சியில் காமாட்சியாக, காசியில் விசாலாட்சியாக இருப்பவள் அவளே. மீன் போல கண் இமைக்காமல் இருந்து தன் கடைக்கண்களால் உயிர்களை காத்து கரை சேர்க்கிறாள் மீனாட்சி. தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுபவளாக காஞ்சியில் காமாட்சி என பெயர் பெறுகிறாள். விசாலமான பார்வையால் உயிர்களை எல்லாம் கடைத்தேற்றுவதால் விசாலாட்சி என காசியில் அழைக்கப்படுகிறாள்.  அவளை வணங்கும்போது,


‘‘தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!’’
என்று அம்பிகையின் திருவடிகளை ஆடியில் பாடி மகிழ்வோம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar